காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் கைது; ஒருவர் அரசு ஊழியர்...!!
1 புரட்டாசி 2023 வெள்ளி 06:25 | பார்வைகள் : 5456
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 8 பயங்கரவாதிகளில் ஒருவர் அரசு பணியில் இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 30 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில், மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 30 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில், மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.
சிலர் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோர்ட்டில் கூட சிலர் பணியாற்றி வருகின்றனர் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். அவர்கள் தண்டனையில் இருந்து தப்பி, இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என போலீசார் கூறினர்.
8 பயங்கரவாதிகளும் அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இவர்களில் பரிடி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணியாற்றியவர். தோடா கோர்ட்டு வளாகத்தில் இஷ்பாக் எழுத்தராக இருந்துள்ளார். அவர்கள் அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.