இறைச்சிக்கடைக்காரரின் மகன்... 22 வயதில் பாராளுமன்ற உறுப்பினர்..!!

12 ஆடி 2024 வெள்ளி 17:38 | பார்வைகள் : 7768
நடைபெற்று முடிந்த இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, 22 வயதுடைய இளைஞன் ஒருவர், பாராளுமன்றத்துக்குள் உறுப்பினராக நுழைந்துள்ளார்.
பிரான்சின் வடகிழக்கு பகுதியில் உள்ள Ardennes மாவட்டத்தின் முதலாவது தொகுதியில் Rassemblement national கட்சி சார்பாக போட்டியிட் Flavien Termet எனும் இளைஞனே வெற்றி பெற்றுள்ளார். இவர் தனது சட்டப்படிப்பினை தொடர்ந்துகொண்டே பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்ற உள்ளார். 17 ஆவது பாராளமன்றத்தின் மிக குறைந்த வயதுடைய உறுப்பினர் எனும் அடையாளம் அவருக்கு கிடைந்துள்ளது.
முதலில் Les Républicains கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த அவர், பின்னர் கடந்த வருடத்தில் Rassemblement national கட்சியில் இணைந்துகொண்டார். அதன் பின்னரே அவருக்கான வெற்றி தேடி வந்துள்ளது.
இவரது தந்தை அப்பகுதியில் இறைச்சி விற்பனை செய்யும் தொழில் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.