Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைகளில் அபாயா அணிவதை விரும்பாத மக்கள்... கருத்துக்கணிப்பு முடிவு..!!

பாடசாலைகளில் அபாயா அணிவதை விரும்பாத மக்கள்... கருத்துக்கணிப்பு முடிவு..!!

13 ஆடி 2024 சனி 07:00 | பார்வைகள் : 2641


பிரான்சில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், பாடசாலைகளில் மாணவர்கள் அபாயா (பெண்கள் அணியும் இஸ்லாமிய கலாசார உடை) அணிவதை விரும்பவில்லை என கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

CNEWS, Europe 1 மற்றும் JDD போன்ற ஊடகங்களுக்காக CSA institute நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. அதன்படி, பத்தில் எட்டுப் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத அடையாளங்களை பாடசாலைகளுக்குள் கொண்டுவருவது ஏற்புடையது அல்ல எனவும், இஸ்லாமிய கலாச்சார உடையணிந்து பாடசாலைக்கு வருவதை  விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

17% சதவீதமானவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் 3% சதவீதமானவர்கள் கருத்துக்கள் வெளியிட மறுத்துள்ளனர். 

முன்னதாக, இதேபோன்ற ஒரு கருத்துக்கணிப்பை சென்ற 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 82% சதவீதமானவர்கள் பாடசாலைகளில் அபாயா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அந்த எண்ணிக்கை 2% சதவீதத்தால் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கருத்துக்கணிப்பு 18 வயதுக்கு மேற்பட்ட 1,011 பேரிடம்ஜூலை 11 -12 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்