'JO24' பாரிஸ் வரும் ஒலிம்பிக் தீபமும், ஈழத்தமிழர் தர்ஷன் செல்வராஜாவும்.

13 ஆடி 2024 சனி 08:07 | பார்வைகள் : 13301
ஒலிம்பிக் தீபத்தின் வரலாற்றில், ஒலிம்பிக் தீபம் நாடு விட்டு நாடு பயணிக்கும் போது அனேகமாக விமானங்களில், வாகனங்களில் மட்டுமே பயணித்திருக்கிறது. முதல் தடவையாக கடலில், கப்பலில் பயணம் செய்த வரலாறு பாரிசில் நடைபெறவுள்ள 'JO24' ஒலிம்பிக் போட்டிகளின் போதே இடம் பெற்றுள்ளது. இந்த வரலாற்று மாற்றத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி கிரீஸின் ஒலிம்பியாவிலிருந்து புறப்பட்டு கப்பலில் பயணம் செய்து பிரான்ஸ் தேசத்தின் பெருமை மிக்க கடற்கரை நகரமான 'Marseille' வந்தடைந்தது. அன்றிலிருந்து பிரான்ஸ் பிரதான நிலப்பரப்பிலும் கடல் கடந்த மாவட்டங்களிலும் இந்த தீபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
கடந்த ஏப்ரல் 16ம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் ஜூலை 26 திகதி வரையான 101 நாட்கள் அஞ்சல் ஓட்டம் முலம் சுற்றி வரப்படும் ஒலிம்பிக் தீபம், நாளை 14/07 பிரான்ஸ் சுதந்திர தினத்தன்று தலைநகர் பாரிசை வந்தடைந்து பாரிசின் பிரதான வீதிகளில் பயணிக்கவுள்ளது. 14 ஞாயிற்றுக்கிழமை, 15 திங்கட்கிழமை இருநாட்கள், நாள் ஒன்றுக்கு 120 பேர் சுமந்து செல்லும் ஒலிம்பிக் தீபத்தின் பவனியில் ஈழத்தமிழர் தர்ஷன் செல்வராஜாவும் தீபத்தை சுமந்து செல்லவுள்ளார்.
கடந்த வருடம் மிகச் சிறந்த பிரெஞ்சுப் பாண் 'baguette traditionnelle' தயாரிக்கும் போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம், நாட்டின் அரசதலைவரின் வாசல்ஸ்தலமான எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகிக்கின்ற தகுதியையும், பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா அவர்களே இந்த தீபத்தை சுமந்து செல்லவுள்ளார். பாரிஸ் வாழும் தமிழர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றும் படி ஒரு சில தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1