Paristamil Navigation Paristamil advert login

யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி பற்றிய விபரம்

யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி பற்றிய விபரம்

13 ஆடி 2024 சனி 08:28 | பார்வைகள் : 758


யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி நடக்கும் ஞாயிறன்று மட்டும் பிரித்தானிய மக்கள் சுமார் 800 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை நடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஒல்லி வாட்கின்ஸ் பதிவு செய்த கோல் ஒன்றால் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மட்டுமின்றி, வெளிநாட்டு மண்ணில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் முதல் இங்கிலாந்து கால்பந்து அணி இதுவாகும். ஞாயிறன்று யூரோ கிண்ணம் இறுதிப் போட்டி என்பதால், மது விரும்பிகளுக்கு கூடுதல் சலுகையாக ஞாயிறு இரவும் மது விற்பனை முன்னெடுக்கப்படுகிறது.

யூரோ கிண்ணம் அரையிறுதி ஆட்டம் நடந்த புதன்கிழமை மட்டும் மதுபான விடுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பிரித்தானிய மக்கள் 405 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.


இதனால், இறுதிப்போட்டி நடக்கும் ஞாயிறன்று 800 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிறு மட்டும் பிரித்தானியாவின் மது விரும்பிகள் 120 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மது அருந்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் யூரோ கிண்ணம் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கால்பந்து அணிக்கு ஆதரவளிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் ஜேர்மனி பயணப்பட இருக்கிறார்.

வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஜேர்மனியின் பெர்லின் நகருக்கு சனிக்கிழமை புறப்படுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் இளவரசி கேட் மிடில்டன் வார இறுதியில் விம்பிள்டனில் நடக்கும் டென்னிஸ் போட்டியைக் காணச் செல்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, பரிசளிக்கும் நிகழ்விலும் கேட் மிடில்டன் கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்