Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து -  22 மாணவர்கள் பலி

நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து -  22 மாணவர்கள் பலி

13 ஆடி 2024 சனி 08:41 | பார்வைகள் : 871


நைஜீரியாவின் வடக்கு-மத்திய பிளாட்யூ(north-central Plateau) மாநிலத்தின் புசா புஜி(Busa Buji) பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிட பாடசாலை, மாணவர்கள் வகுப்பிற்கு வந்த சிறிது நேரத்திலேயே இடிந்து விழுந்தது.

செயிண்ட்ஸ் அகாடமி கல்லூரி என்ற இந்த பாடசாலையில் இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 

மொத்தம் 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக மீட்புப் பணியாளர்கள் 132 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பாடசாலையின் "மோசமான கட்டுமானம்" மற்றும் ஆற்றுக் கரைக்கு அருகில் அமைந்திருந்த இடம் ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிட இடிபாடு என்பது ஆபிரிக்காவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் அதிகரித்து வரும் கவலைக்குரிய பிரச்சனையாக உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்