இளங்கலை பட்டதாரிகள்.. 91.4% சதவீத தேர்ச்சி..!
13 ஆடி 2024 சனி 13:00 | பார்வைகள் : 12704
2024 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டதாரிகளுக்கான பரீட்சை (baccalauréat 2024) எழுதியவர்களில் 91.4% சதவீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
684,200 பேர் இவ்வாண்டில் சித்தியடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.4 புள்ளிகள் அதிகமாகும். பரீட்சை எழுதியவர்களில் Rennes நகரைச் சேர்ந்தவர்களே அதிகளவில் சித்தியடைந்துள்ளனர். மிகக்குறைந்த அளவு சித்தியடைந்தவர்களின் நகரங்களில் Mayotte தீவு உள்ளது.
Bordeaux, Toulouse, Poitiers, Grenoble, Limoges, Besançon, Nantes போன்ற நகரங்களில் 85% சதவீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இவ்வருடம் இளங்கலை பரீட்சைக்காக ஒன்பது வயதுடைய சிறுமி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை 76 வயதுடைய ஒருவர் இந்த பரீட்சையை எழுதியிருந்தார். அவரே இவ்வருடத்தின் வயது முதிர்ந்த விண்ணப்பதாரியாவார்


























Bons Plans
Annuaire
Scan