Paristamil Navigation Paristamil advert login

கருணைக்கொலை இயந்திரத்திற்கு தடை விதிக்கும்  சுவிட்சர்லாந்து

கருணைக்கொலை இயந்திரத்திற்கு தடை விதிக்கும்  சுவிட்சர்லாந்து

13 ஆடி 2024 சனி 11:22 | பார்வைகள் : 1687


Exit Switzerland என்ற நிறுவனம் இந்த சர்கோபகஸ் (sarcophagus) என்ற இயந்திரத்தை தயாரித்துள்ளது.

இந்த இயந்திரத்தை உருவாக்கியவர் டாக்டர். பிலிப் நிட்ச்கே (Dr Philip Nitschke).

கருணைக்கொலையை (euthanasia) கோருவோருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் விரைவில் கிடைக்கும் என்று ஜூன் 10 அன்று அவர் அறிவித்தார். 

ஆனால், இந்த கேப்சூலின் தீங்கு விளைவிக்கும் காரணத்தால் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை செய்துள்ளது.

தாங்க முடியாத மருத்துவப் பிரச்சனையால் அவதிப்படுபவர் எளிதில் மரணம் அடைய இந்த கேப்ஸ்யூல் பயனுள்ளதாக இருக்கும் என இதனை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருணைக்கொலை செய்துகொள்ள விரும்புபவர்கள் இந்த கேப்சூலில் உட்காரும் போது, ​​இயந்திரம் "நீங்கள் யார்?, எங்கே இருக்கிறீர்கள்?, இந்த பொத்தானை அழுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? என மூன்று கேள்விகளைக் கேட்கும் என்று டாக்டர் பிலிப் கூறுகிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தால், இயந்திரம் அதன் வேலையைத் தொடங்கும், பின்னர் பொத்தானை அழுத்தலாம் என்று அவர் கூறினார்.

பொத்தானை அழுத்திய 30 வினாடிகளில் ஆக்சிஜன் சதவீதம் 21ல் இருந்து 1 சதவீதம் வரை குறைந்து நொடிகளில் அந்த நபர் இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

கடுமையான விமர்சனங்கள் காரணமாக இந்த கேப்சூலை தடை செய்ய சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்