பிரான்சில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உடல்ரீதியான தாக்குதல்கள் பதிவாகிறது..!
13 ஆடி 2024 சனி 14:05 | பார்வைகள் : 3964
ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உடல்ரீதியான தாக்குதல்கள் பதிவாகுவதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்ற 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் 205,900 சம்பவங்கள் இதுபோல் பதிவானதாகவும், நாள் ஒன்றுக்கு குறைந்தது 500 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பம் அல்லது குடும்பத்துக்கு வெளியே பொது இடங்களில் (வீதிகளில்.. மதுபான விடுதிகளில்... மைதானங்களில்...) இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 69% சதவீதம் ஆண்கள் எனவும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன. இந்த 69% சதவீதத்தினரில் 55% சதவீதத்தினர் 18 வயது நிரம்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய 31% சதவீதமானவர்கள் பெண்கள் எனவும், அவர்களில் 23% சதவீதமானவர்கள் மட்டுமே 18 வயது நிரம்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14% சதவீதமானஆண் சிறுவர்களும், 7% சதவீதமான சிறுமிகளும் உடல்ரீதியான வன்முறைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.