சென் நதியில் நீந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்..!!
13 ஆடி 2024 சனி 17:00 | பார்வைகள் : 3380
சென் நதி ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வருகிறது என நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. இறுதியாக அடுத்த பத்து நாட்களில் சென் நதியில் நீந்த முடியும் என நேற்று வெள்ளிக்கிழமை பரிஸ் நகரசபை அறிவித்தது.
இந்நிலையில், பிரான்சின் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் Amelie Oudea Castera, இன்று ஜூலை 13, சனிக்கிழமை காலை சென் நதியில் நீந்தினார். அவருடன் பரா ஒலிம்பிக் சாதனையாளர் Alexis Hanquinquant உடன் இருந்தார். இருவரும் இன்று காலை Alexandre III மற்றும் Invalides மேம்பாலங்களுக்கு அருகே இந்த நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் இருவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன், 'வாக்குறுதி காப்பாற்றப்பட்டது!' எனவும் தெரிவித்தார்.
இம்மாதம் 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், சென் நதியில் நீந்தலாம் எனும் நகரசபையின் வாக்குறுதியில் நம்பிக்கை அற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த செயல், பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.