Paristamil Navigation Paristamil advert login

JO 2024 : பாதுகாப்பு காரணங்களுக்காக 3,500 பேர் வெளியேற்றம்..!!

JO 2024 :  பாதுகாப்பு காரணங்களுக்காக 3,500 பேர் வெளியேற்றம்..!!

14 ஆடி 2024 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 6702


ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்காக இதுவரை 3,500 பேர் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin  தெரிவித்தார்.

மொத்தமாக 770,000 பேர் சோதனையிடப்பட்டதாக, அவர்களில் 3,500 பேர் நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களில் 130 பேர் தேசிய பாதுகாப்புக்கு இடையூறாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் S பட்டியலில் (fichés S) இருப்பவர்கள் எனவும் தெரிவித்தார். 

16 பேர் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்கள் எனவும், அவர்களும் வெளியேற்றப்பட்டு சிறப்பு கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். 

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு சகலவழிகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்