புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!
14 ஆடி 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 1340
டாடா நானோ கார், டாடா குழுமத்தின் கெளரவத் தலைவர் ரத்தன் டாடாவின் மனதில், சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண இந்தியக் குடிமகனுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது.
இது இப்போது Tata Nano.ev வடிவில் வருகிறது.
Tata Nano.EV காரின் வெளியீட்டு தேதி, விலை விவரங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், தற்போது அனைவரும் Tata Nano.ev காரின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போதைய அதிக விலை சந்தையில் மற்ற கார்களுக்கு போட்டியாக இந்த காரை குறைந்த விலையில் கொண்டு வருவதுதான் டாடா மோட்டார்ஸ் முன் உள்ள பெரிய சவால்.
ஆரம்பத்தில் ரூ.1 லட்சத்தில் கிடைத்த டாடா நானோ கார், இப்போது 3 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்றும், உயர் ரக மாடலின் விலை ஏழு முதல் எட்டு லட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Tata Nano.ev (Tata Nano.ev) கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 200-300 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக தெரிகிறது.
உள்நாட்டு எலெக்ட்ரிக் கார்கள் துறையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், டாடா இவி கார்களை போலவே லித்தியம் அயான் பேட்டரி பேக்கை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்திய சந்தை. நிலையான ஏசி சார்ஜிங் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொகுசு கார்களை ஒப்பிடும் போது, காரின் செயல்பாட்டிற்கு அடிப்படை அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கார்களுக்கு போட்டியாக Tata Nano.ev இன் விலையை நிர்ணயிப்பதே டாடா மோட்டார்ஸ் முன் இருக்கும் உண்மையான சவால்.