மீண்டும் இணைந்த சரத்குமார் - தேவயானி ?
14 ஆடி 2024 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 867
சித்தார்த் நடிக்க இருக்கும் 40வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் ’8 தோட்டாக்கள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இணைந்த நான்கு பிரபலங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. முதலாவது ஆக இந்த படத்தில் சரத்குமார் இணைகிறார். இன்று சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இதனை அடுத்து இந்த படத்தில் தேவயானி ஒரு முக்கிய கேரக்டரில் இணைகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் இணைகிறார். இவர் ஏற்கனவே மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக சைத்ரா அச்சார் என்பவர் இணைந்துள்ளார். இவர் கன்னட திரையுலகின் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகிய நான்கு பிரபலங்கள் ’சித்தார்த் 40’ படத்தில் இணைந்த நிலையில் இன்னும் யார் யார் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.