Paristamil Navigation Paristamil advert login

எ‌ரிபொரு‌ள்க்களின் விலையுயர்வு அரசு பொறுப்பு ஏற்காது நிதியமைச்சர் Bruno Le Maire.

எ‌ரிபொரு‌ள்க்களின் விலையுயர்வு அரசு பொறுப்பு ஏற்காது நிதியமைச்சர் Bruno Le Maire.

3 புரட்டாசி 2023 ஞாயிறு 19:02 | பார்வைகள் : 6960


எரிபொருட்களின் விலை; இந்த கோடைகாலத்தில் மீண்டும் உயர்வடைந்துள்ள நிலையில், 'அரசாங்கம் வாகன பாவனையாளர்களுக்கு உதவித் தொகையாக லீற்றருக்கு 15 Centimes முதல், 20 Centimes வரை விலைக் கழிவை வழங்க வேண்டும்' எனும் Hauts-de-France மாகாணத் தலைவர் Xavier Bertrand அவர்களின் வேண்டுகோளுக்கு, இன்று காலை BFM தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பதிலளித்த நிதியமைச்சர் Bruno Le Maire 'அரசாங்கம் இதற்க்கு பொறுப்பேற்காது' என தெரிவி்த்துள்ளார்.

'மாகாணத் தலைவர் Xavier Bertrand அவர்களின் வேண்டுகோளுக்கு அரசு தலைசாய்த்தால் 12 பில்லியன் Eurosக்களை அரசு செலவிட வேண்டு்ம்' என தெரிவித்த அமைச்சர்,  ஏற்கனவே அரசு மின்சாரக் கட்டணத்தில் ஒரு பகுதியை செலுத்துவதால் 30 பில்லியன் Euros பணத்தை இழக்கிறது எனவும், இதில் இருந்து படிபடியாக அரசு 2024ம் ஆண்டில் வெளியேறும் எனவும் தெரிவித்தார்.

2022 இலையுதிர் காலத்தில் எரிபொருட்களின் விலையில் 30 முதல் 10 Centimes வரையான விலைக்கழிவை அரசு ஏற்றுக் கொண்டு வழங்கியது, இந்த நடைமுறை கடந்த Decembre மாதத்துடன் நிறைவுக்கு வந்தது.  இதற்காக அரசு 8 பில்லியன் Eurosகளை செலவிட்டது எனவும் நிதியமைச்சர் Bruno Le Maire சுட்டிக்காட்டினார்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பை குறைக்க தாங்கள் தொடர்த்து பேச்சுவார்த்தைக்களை மேற்க்கொண்டு வருவதாகவும், இனிவரும் மாதங்களில் படிப்படியாக விலைக்குறைப்பு எற்படும் என அரசு நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவி்த்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்