பரிஸ் மெற்றோவில் யூத மத தாக்குதல் - ஒருவர் கைது.!
 
                    16 ஆவணி 2024 வெள்ளி 17:31 | பார்வைகள் : 7787
பரிஸ் மெற்றோவில் வைத்து யூத பெண் ஒருவரை அவமதித்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பரிசில் யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம் உள்ளன. 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஓகஸ்ட் 14, புதன்கிழமை ஒன்பதாம் இலக்க மெற்றோவில் வைத்து அவதிக்கப்பட்டிருந்தார். தகாத வார்த்தைகளில் அப்பெண்ணை திட்டியதுடன், சில அவமதிக்கும் வகையினால சைகையினையும் காட்டியுள்ளார். இக்காட்சிகள் மெற்றோவில் பயணித்த ஏனைய பயணிகளால் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அப்பெண் வழக்கு தொடுத்ததை அடுத்து, இன்று ஓகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan