சோகத்தில் முடிந்த சாகச நிகழ்ச்சி.. விமானம் கடலில் விழுந்து விமானி பலி..!
16 ஆவணி 2024 வெள்ளி 18:46 | பார்வைகள் : 16168
விமான சாகச நிகழ்ச்சி ஒன்று பெரும் சோகத்தில் சென்று முடிவடைந்துள்ளது. விமான சாகசத்தில் ஈடுபட்ட விமானி ஒருவர் கடலில் விழுந்து பலியாகியுள்ளார்.

பிரான்சின் தென் கிழக்கு பகுதியான Var மாவட்டத்தின் Le Lavandou கடற்கரையில் இந்த சாகச நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கூடியிருக்க, விமானம் ஒன்று சாய்வாக பறந்து கடலில் விழும் காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் நேரடியாக கடலில் விழுந்து இறக்கையை உடைத்துக்கொண்டு மூழ்கியது. உடனடியாக மீட்புக்குழுவனர் அழைக்கப்பட்டு கடலில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
சிலமணிநேரங்கள் கழித்து விமானியின் சடலம் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan