Essonne : தொடருந்து நிலையத்தில் வைத்து பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்..!

17 ஆவணி 2024 சனி 07:00 | பார்வைகள் : 7408
RER தொடருந்து நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
Savigny-sur-Orge (Essonne) நகரில் இச்சம்பவம் நேற்று ஓகஸ்ட் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 31 வயதுடைய பெண் ஒருவர் தொடருந்துக்காக காத்திருந்த வேளையில், அவரை நெருங்கிய ஒருவர், அப்பெண்ணை பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்க, €50 யூரோக்கள் பணம் தருவதாக தெரிவித்கு, தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அவர் அப்பெண் தொடர்ந்து மறுக்கவே, ஆத்திரமடைந்த குறித்த நபர் கூரான சிறிய கத்தி ஒன்றினால் அவரை வெட்டியுள்ளார்.
பெட்டிகள் வெட்ட பயன்படுத்தப்படும் தகடு போன்ற கத்தியினால் தாக்கியதில் உடலில் இரண்டு இடங்களில் ஆழமாக வெட்டுக்காயம் ஏற்பட்டது.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.