Paristamil Navigation Paristamil advert login

ஒரு நாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

ஒரு நாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

17 ஆவணி 2024 சனி 08:06 | பார்வைகள் : 1084


ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்து  இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே வரலாறு படைத்துள்ளார்.

இரிஷ் மகளிர் அணிக்கு எதிராக விளையாடிய விஷ்மி குணரத்னே (Vishmi Gunaratne), தனது முதல் ஒருநாள் சர்வதேச (ODI) சதத்தை அடித்து,  இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம், அவருடைய திறமையை சர்வதேச கிரிக்கெட்டில் நிரூபித்துள்ளார். இந்த சாதனை, குணரத்னேவுக்கு மட்டுமல்ல, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கே ஒரு பெரும் வெற்றியாகும்.

மேலும் இந்த சாதனை, இலங்கை மகளிர் அணிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விஷ்வி மூன்று இலக்க எண்ணிக்கையுடன் பிரகாசித்தார். இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இலங்கை கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி பெற்றார்.

இலங்கைக்காக அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் விஷ்வி வைத்துள்ளார்.

குணரத்னேவுக்கு முன்னர், சாமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீசஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியை வென்ற  இலங்கை அணி துடுப்பாட தேர்வு செய்தது.

கேப்டன் சாமரி (0) டக் அவுட்டாக, விஷ்மி குணரத்னே (103) அவுட்டாகாமல் இருந்தார். ஹர்ஷிதாவுடன் (19) முக்கிய பார்ட்னர்ஷிப்பை நிறுவிய விஷ்மி, அயர்லாந்து பந்துவீச்சாளர்களுக்காக ஒரு தனி ஆட்டத்தை விளையாடினார்.

விஷ்மி 98 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர் விளாசினார். அவர் அணியின் ஸ்கோர் எண்ணிக்கை 157 ஓட்டங்களாக இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய ஹசின் பெரேரா (46), சுகந்திகா குமாரி (18), அனுஷ்கா சஞ்சீவனி (17) ஆகியோர் விளையாடினர்.

50 ஓவர் முடிவில்  இலங்கை அணி மொத்தம் 260 ஓட்டங்கள் குவித்தன.

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 261 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்