Paristamil Navigation Paristamil advert login

வெற்றிகரமாக விண்ணுக்கு சென்ற SSLVD-3 ரொக்கெட்

வெற்றிகரமாக விண்ணுக்கு சென்ற SSLVD-3 ரொக்கெட்

17 ஆவணி 2024 சனி 08:20 | பார்வைகள் : 3047


புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான EOS-08 Mission இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று முற்பகல் 9.17க்கு எஸ்.எல்.எல்.வி ரீ-3 (SSLV-D3) எனும் ஏவுகணை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்ட 13வது நிமிடத்தில் குறைந்த புவி சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த செயற்கைக் கோள் மூலம் பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்