Paristamil Navigation Paristamil advert login

விஜய்யின் சாதனைகளை முறியடிக்குமா தி கோட்' டிரைலர் ?

 விஜய்யின்  சாதனைகளை முறியடிக்குமா தி கோட்' டிரைலர் ?

17 ஆவணி 2024 சனி 10:06 | பார்வைகள் : 697


யூடியூப் தளத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர், டிரைலர் ஆகியவற்றில் விஜய் படங்களும், அஜித் படங்களும்தான் போட்டி போட்டு வருகின்றன. விஜய் பட டிரைலர்களைப் பொறுத்தவரையில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையை 'லியோ' படம் வைத்துள்ளது.

24 மணி நேர சாதனையில் அப்படத்தின் டிரைலர் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்று தமிழ் சினிமா டிரைலர்களின் சாதனையில் முதலிடத்தில் உள்ளது. 'லியோ' டிரைலர் கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி வெளியானது. சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு விஜய் படம் ஒன்றின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது..

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், விஜய் நாயகனாக நடிக்கும் 'தி கோட்' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. முந்தைய சாதனையான 'லியோ' பட டிரைலரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்குமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்