இந்தியா பயணமாகும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
4 புரட்டாசி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 15568
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு இடம்பெற உள்ள G20 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.
இம்மாதம் 9 ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு பயணிக்க உள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகை (எலிசே) தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் இடம்பெற உள்ள இந்த மாநாட்டில் பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டினைத் தொடர்ந்து, மறுநாள் 10 ஆம் திகதி மக்ரோன் பங்களாதேசுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பின்னர் பரிசுக்கு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan