விண்வெளிக்குப் பறக்கவிருக்கும் முதல் ஜேர்மன் பெண்
17 ஆவணி 2024 சனி 15:58 | பார்வைகள் : 1433
விண்வெளிக்கு சென்ற முதல் ஜேர்மன் பெண் யார் என இணையத்தில் தேடினால், யார் யார் பெயரோ வருகிறது. விடயம் என்னவென்றால், விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் பலர் முன் ஈடுபட்டுள்ளார்கள்.
சிலர் விண்வெளி திட்டங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள், ஆனால், திட்டம் வெற்றிபெறவில்லை.
ஆனால், இப்போது ஒரு ஜேர்மன் பெண் விண்வெளிக்குச் செல்லவிருக்கிறார். அவரது பெயர் Rabea Rogge.
ரோபோடிக்ஸ் ஆய்வாளரான Rabea, ஸ்பேஸ் எக்ஸின் Falcon 9 என்னும் ராக்கெட்டில், 4 விண்வெளி வீரர்களுடன் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார்.
சூரிச்சிலுள்ள ETHஇல் மின் பொறியியலும், தகவல் தொழில்நுட்பமும் கற்ற Rabea, நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
Fram2 என அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் Rabea, பூமியின் துருவங்களுக்குச் செல்லவிருக்கும் முதல் விண்வெளித் திட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.
2024 இறுதிக்குள் Rabea விண்வெளிக்குச் செல்ல இருக்கும் நிலையில், தன்னை இந்த திட்டத்துக்குத் தேர்ந்தெடுத்ததை தான் கௌரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார் அவர்.