உலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத நாடு - எது தெரியுமா?
17 ஆவணி 2024 சனி 16:03 | பார்வைகள் : 3115
மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும்.
ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளையும், சமயச் சடங்குகளையும் மதம் குறிக்கிறது.
உலகில் அதிக மக்கள் பின்பற்றும் மதங்களில் முதன்மையானது கிறிஸ்துவம். இதற்கடுத்து இருக்கும் மதம் இஸ்லாம்.
இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மக்கள் முஸ்லீம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
உலகின் கணிசமாக முஸ்லீம்கள் வாழும் இடமாக மத்திய கிழக்கு ஆசியா விளங்குகிறது.
சவுதி அரேபியா , ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
அந்தவகையில், ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத நாடு உலகிலேயே மிகச் சிறிய நடான வாடிகன் சிட்டி.
ஐரோப்பிய நாடான வாட்டிகன் சிட்டி உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது.
உலகின் மிக அழகான நாடான, இத்தாலியின் ரோம் பகுதிக்குள் அமைந்துள்ள வாட்டிகன் சிட்டியில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.

























Bons Plans
Annuaire
Scan