வாட்ஸ்அப்பில் ஊடுறுவும் AI தொழில்நுட்பம்
18 ஆவணி 2024 ஞாயிறு 13:15 | பார்வைகள் : 4188
உலகின் பிரபலமான செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப்பானது Meta AI Voice Chat உடன் அறிமுகமாகவுள்ளது.
பயனர்கள் குரல் மூலம் மெட்டா AI இடம் கேள்விகளைக் கேட்டால், அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்கும்.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம் என கூறப்படுகிறது.
மேலும், வாட்ஸ்அப் விரைவில் AR video calling, background edit, AI studio, user names, double tap to react ஆகிய அம்சங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AR (Augmented Reality) காணொளி அழைப்பு(video call) அம்சம் விரைவில் அறிமுகமாவுள்ளதோடு, இந்த அம்சம் பயனர்கள் காணொளி அழைப்புகளைச் செய்யும்போது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என குறிப்பிடப்படுகிறது.
குறித்த அம்சத்தின் உதவியுடன் காணொளியின் பின்னணியை மாற்றம் செய்ய முடியும்.
இனி தொலைபேசி எண்ணுடன் வேலை செய்யாமல் பயனர் பெயர்களுடன் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan