Paristamil Navigation Paristamil advert login

கிணறு ஏன் வட்ட வடிவில் காணப்படுகின்றது....?

 கிணறு ஏன் வட்ட வடிவில் காணப்படுகின்றது....?

18 ஆவணி 2024 ஞாயிறு 13:20 | பார்வைகள் : 1256


பண்டைய காலங்களில் இருந்து கிணறுகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இன்றும் கிணறுகள் இருந்து வருகிறது. நகரங்களிலும் சில இடங்களில் நாம் கிணறுகளை பார்க்க முடியும்.

நாம் பார்க்க கூடிய கிணறுகள் அனைத்தும் வட்ட வடிவிலே இருந்திருக்கும். இந்த கிணறுகள் முக்கோணமாகவோ, சதுரமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ இருந்ததில்லை.

வட்ட வடிவத்தில் கிணறுகள் இருப்பதற்கு பின்னால் அறிவியல் காரணம் ஒன்று உள்ளது. வட்டக் கிணறுகள் மிகவும் வலிமையான அடித்தளத்தை கொண்டது.

மேலும், வட்ட கிணறுகளில் மூலைகள் இல்லாததால் கிணற்றைச் சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும்.

ஆனால், சதுர வடிவில் கிணறுகள் இருந்தால் அதில் இருக்கும் நான்கு மூலைகளிலும் நீரின் அழுத்தம் இருக்கும். இதனால், நீண்ட காலம் கிணறுகள் நீடிக்காதது மட்டுமல்லாமல், சரிவு அபாயமும் அதிகமாக இருக்கும்.

இந்த காரணத்தினால் தான் வட்ட வடிவத்தில் கிணறுகள் இருக்கின்றன. சீரான அழுத்தம் இருப்பதாலும், மண் சரிவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தான் கிணறுகள் வட்ட வடிவில் உருவாக்கப்படுகின்றன.

மேலும், சதுரம் மற்றும் முக்கோண வடிவில் கிணறுகளை உருவாக்குவது மிகவும் அரிதானது. வட்ட வடிவில் கிணறுகளை தோண்டுவது எளிமையாக இருப்பதால் இந்த வடிவத்தில் உருவாக்குகின்றனர்.    

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்