Paristamil Navigation Paristamil advert login

இளவரசர் வில்லியத்தின் முடிசூட்டு விழா தொடர்பில் வெளியாகிய தகவல்...

இளவரசர் வில்லியத்தின் முடிசூட்டு விழா தொடர்பில் வெளியாகிய தகவல்...

19 ஆவணி 2024 திங்கள் 05:33 | பார்வைகள் : 1880


இளவரசர் வில்லியம், தனது முடிசூட்டு விழாவில் அவரது தம்பியான ஹரி பங்கேற்பதை விரும்பவில்லை என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

2020ஆம் ஆண்டு, தனது ராஜ குடும்ப பொறுப்புகளை உதறிவிட்டு, அமெரிக்கப் பெண்ணான தன் மனைவி மேகனுடன் அமெரிக்காவில் குடியேறினார் இளவரசர் ஹரி.

ஆனால், தன் மனைவியுடன் சேர்ந்துகொண்டு, தன் தந்தை, தன் தந்தையின் மனைவி கமீலா, தன் அண்ணன் இளவரசர் வில்லியம், அண்ணி கேட் என அனைவரையும் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் ஹரி.

அத்துடன், தனது சுயசரிதைப் புத்தகத்திலும் தனது குடும்பத்தினரை மோசமாக விமர்சித்திருந்தார். 

அதைத் தொடர்ந்து ராஜ குடும்பத்துக்கும் ஹரிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.

அண்ணனும் தம்பியும் சேர்ந்துவிட மாட்டார்களா என ராஜ குடும்ப நலம் விரும்பிகள் ஏங்கிக்கொண்டிருக்க, ஆனா, அப்படி ஒரு விடயம் நடக்கவே நடக்காதோ என எண்ணும் வகையிலான செய்திகள் வெளியாகிவருகின்றன.

இளவரசர் வில்லியம், ஹரியுடைய அண்ணன் மட்டுமல்ல, அவர் பிரித்தானியாவின் வருங்கால மன்னரும்கூட.

இப்போதே ஒரு மன்னராக பணியாற்றும் வகையிலான பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டுவருகிறார் வில்லியம்.

மன்னர் சார்லசுக்குப் பின் அவர்தான் மன்னராக பொறுப்பேற்கவேண்டும். மன்னர் புற்றுநோய் உட்பட பல உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள நிலையில், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இந்நிலையில், அப்படி இளவரசர் வில்லியம் பிரித்தானியா மன்னராக பொறுப்பேற்கும் நிலையில், அவரது முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொள்வதை வில்லியம் விரும்பவில்லை என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆக, அண்ணன் தம்பிக்கிடையிலான பகை தீர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்