Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பைன்ஸ்  கடலோர காவல்படை யை கடுமையாக எச்சரிக்கும் சீனா!

பிலிப்பைன்ஸ்  கடலோர காவல்படை யை கடுமையாக எச்சரிக்கும் சீனா!

19 ஆவணி 2024 திங்கள் 08:29 | பார்வைகள் : 2256


தென் சீன கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகின்றது.

 திங்கட்கிழமை காலை சபீனா ஷோல்(Sabina Shoa) அருகே சீன கப்பல் மீது வேண்டுமென்றே பிலிப்பைன்ஸ் மோதியதாக சீன கடலோர காவல்படை குற்றம்சாட்டியுள்ளது.

2 பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை கப்பல்கள் சபீனா ஷோல் அருகே உள்ள நீரோட்டத்திற்குள் நுழைந்து, சீன கடலோர காவல்படையின் எச்சரிக்கைகளையும் மீறி காலை 3.24 மணியளவில் சீன கப்பல் மீது வேண்டுமென்றே மோதியதாக செய்தி தொடர்பாளர் சீன கடலோர காவல்படையின் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் இந்த மோதல் குறித்த எந்த கருத்தையும் உடனடியாக வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த மோதலுக்கு முற்றிலும் பிலிப்பைன்ஸ் தரப்பு தான் பொறுப்பு  என்று செய்தி தொடர்பாளர் கான் யூ தெரிவித்துள்ளார்.

மேலும் பிலிப்பைன்ஸ் அதன் மீறல்கள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு எச்சரிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கான விளைவுகளை பிலிப்பைன்ஸ் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்