ஆப்பிள் மரமும் விவசாயியும்
19 ஆவணி 2024 திங்கள் 08:41 | பார்வைகள் : 601
ஒரு காலத்துல காட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு.அவறு தன்னோட வீட்ட சுத்தி சின்னதா ஒரு தோட்டம் வச்சிருந்தாரு.
அந்த தோட்டத்துல ஏராளமான பூச்செடிகளும் ,ஒரு பெரிய ஆப்பிள் மரமும் இருந்துச்சு ,அந்த விவசாயி சின்ன வயசா இருக்கிறப்ப இருந்து அந்த மரம் அந்த தோட்டத்துல இருக்கு .
சின்னப்பையனா இருக்கும்போது அந்த மரத்தோட அதிக பாசம் வச்சிருந்தாரு அந்த விவசாயி அந்த மரம் கொடுக்குற சுவையான ஆப்பிள சாப்பிட்டு ரொம்ப சந்தோச போடுவாரு அவரு.
இந்த மரத்தோட நிழல்ல மற்ற நண்பர்களோட விளையாண்டுட்டு அந்த நிழல்லயே தூங்குவாறு அந்த விவசாயி.அந்த ஆப்பிள் மரத்த தன்னோட நண்பனாவே பாவிச்சாரு அந்த விவசாயி
சிலவருஷங்களுக்கு அப்புறமா அந்த ஆப்பிள் மரத்துக்கு ரொம்ப வாசகிடுச்சு.அதனால ஆப்பிள் காய்க்கிறதும் நின்னுபோச்சு அந்த மரத்துல.
ஆப்பிள் மரம் ரொம்ப பெருசா ஆகிட்டதுனால அந்த மரம் தனக்கு இடைஞ்சலா இருக்குனு நினைச்சாரு.
பயன் ஏதும் கொடுக்காத அந்த மரத்த இன்னும் நம்ம தோட்டத்துல வச்சிருக்குறது வீண் எனவே அந்த மரத்த வெட்டிடுறது முடிவு பண்ணாரு.
ஒரு நாள் அந்த ஆப்பிள் மரத்த வெட்ட கோடரியை எடுத்துட்டு தயாரானாரு .இதை பாத்த அந்த மரத்துல வாழ்ந்து வந்த பறவைகள் ரொம்ப பயந்து போயி .விவசாயி அவர்களே இந்த மரம்தான் எங்களுக்கு வீடு.இத தயவு செஞ்சு எங்கள் வீடான இந்த பழைய ஆப்பிள் மரத்த வெட்ட வேண்டாம்னு கேட்டுக்கிச்சுங்க
அந்த ஆப்பிள் மரத்துல வாழ்ந்து வந்த அணில்கள் எல்லாம் அந்த விவசாயிய பத்து, ஐயா தயவு செஞ்சு எங்கள் வாழ்ந்து வரும் இந்த மரத்த வெட்ட வேண்டாம்னு சொல்லுச்சு .
இந்த வேண்டுதல்கள் எதுவும் அந்த விவசாயிக்கு பிடிக்கல அவரு அந்த மரத்த வெட்ட தயாரானாரு . தன்னோட கோடரியை தீட்ட ஆரம்பிச்ச அந்த விவாசி பறவைகள் மற்றும் அணிலோட அழுகையை போடப்படுத்தவே இல்ல
கூர் தீட்டிய கோடரியை எடுத்து அந்த பழைய ஆப்பிள் மரத்த வெட்ட ஆரம்பிச்சாரு .ஒரு பக்கம் வெட்டு பட்ட அந்த மரத்துல உள்ள இருந்து ஒரு தேன் கூடு இருக்குறத பாத்தாரு. ஒரு விரலால அந்த தேன் கூட்டுல இருந்து ஒரு தேன் துளியை எடுத்து சுவைத்தாரு.
தித்திப்பான அந்த தேனொட சுவைல லாகிச்சு போன அந்த விவசாயிக்கு தன்னோட குழந்தை பருவம் ஞாபகம் வந்துச்சு.
அந்த ஆப்பிள் மரத்துல இதைவிட சுவையான ஆப்பிள் சாப்பிட்டது .அந்த ஆப்பிள் மரத்தடியில் ஊஞ்சல் கட்டி ஆடியது .தன்னோட நண்பனா அந்த மரத்த நினச்சு விளையாண்டது எல்லாமே அந்த விவசாயிக்கு ஞயாபகம் வந்துச்சு.
அடடா என்ன ஒரு தவறு செய்ய இருந்தோம் ஒருகாலத்துல நமக்கு உபயோகமா இருந்த மரம் இப்போ பல உயிர்களுக்கு உபயோகமா இருக்கு இந்த மரத்த வெட்ட நினைச்சது பெரும் தவறுன்னு நினைச்சாரு .
அந்த மரத்த வெட்ட நினைச்ச முடிவை மாத்திக்கிட்டு அந்த பறவைகளுக்காகவும் சிறு விலங்குகளுக்கும் அந்த மரத்த விட்டு கொடுத்தாரு
குழந்தைகளே இந்த கதைல இருந்து என்ன தெரிஞ்சுகிட்டம்னா எந்த ஒரு பொருளும் உபயோகம் அற்றது அல்ல அதனால கிடைக்க கூடிய உதவி சின்னதாக வேணும் இருக்கும் ,அதனால யாரையும் ,எதையும் புறக்கணிக்க கூடாது