Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வரும் அமெரிக்காவின் பதில் உதவி செயலாளர்

இலங்கை வரும் அமெரிக்காவின் பதில் உதவி செயலாளர்

19 ஆவணி 2024 திங்கள் 09:44 | பார்வைகள் : 4279


சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்றைய தினம் இலங்கை வரவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, ​​இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கை குற்றங்கள், சிவில் மற்றும் வணிக விண்வெளி நடவடிக்கைகள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் மற்றும் நிலையான பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.  

எதிர்வரும் 21ஆம் திகதி வரை இலங்கையில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் பங்காளிகளை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளார். 

அதேபோல்,  அமெரிக்க ஆதரவு வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடுவது, ஹைட்ரோகிராஃபி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வது போன்ற நிகழ்ச்சி நிரலில் அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் பங்கேற்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்