ஜெர்மனியில் சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
19 ஆவணி 2024 திங்கள் 10:30 | பார்வைகள் : 1453
ஜெர்மனியில் கல்வி கற்பதற்காக சென்றுள்ள சர்வதேச மாணவர்கள், அங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ள வசதிகள், எதிர்காலத்துக்கான வழிகாட்டுதல்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
ஆனால், தங்களுக்கு இப்போது ஒரு அச்சம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.
அதாவது, அடுத்த மாதம் கிழக்கு ஜேர்மனியின் சில பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வலதுசாரியினருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.
மற்ற கட்சி வேட்பாளர்கள் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் தாக்கப்படும் சம்பவங்களும் அங்கு நிகழ்ந்துள்ளன.
வலதுசாரியினர் பதவிக்கு வருவார்களானால், நிலைமை எப்படியிருக்குமோ தெரியாது, எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒரு நிலை ஏற்படலாம் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது என்கிறார் இந்தியாவிலிருந்து ஜேர்மனிக்கு சென்றுள்ள அபிராமி வினோத் மஞ்சு என்னும் இளம்பெண்.
ஆனாலும், மற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தங்கள் மாணவ மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் பல்கலை துணைவேந்தர்கள், எங்கள் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள்.