Seine-et-Marne : பல்பொருள் அங்காடியில் வைத்து பெண்ணுக்கு கத்திக்குத்து.. முன்னாள் கணவர் தப்பி ஓட்டம்!

19 ஆவணி 2024 திங்கள் 12:45 | பார்வைகள் : 7796
Pontault-Combault (Seine-et-Marne) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வைத்து பெண் ஒருவர் கத்தியினால் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய பெண் ஒருவர் வாங்கிக்கொண்டு அங்காடியை விட்டு வெளியேறும் போது, அவரை எதிர்கொண்ட நபர் ஒருவர் அப்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் Henri Mondor மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தாக்குதல் மேற்கொண்டது அப்பெண்ணின் முன்னாள் கணவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் தேடப்பட்டு வருகிறார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025