இஸ்ரேலிய ராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல்
19 ஆவணி 2024 திங்கள் 14:24 | பார்வைகள் : 7125
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மீது தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பானது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவ துருப்புகள் மற்றும் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
லெபனான் நாட்டின் எல்லைக்கு அருகே ஊடுருவியதாக கூறப்படும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மற்றும் வடக்கு இஸ்ரேலின் ராணுவ தளம் ஆகியவற்றின் மீது திங்களன்று தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக லெபனானின் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் Tyre நடந்த இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் படுகொலைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை இந்த பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் போராளி ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக இஸ்ரேல் தெரிவித்த தகவலில், Tyre பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் elite Radwan படையின் தளபதி கொல்லப்பட்டதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்-காசா போருக்கு பிறகு ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய படைகளுடன் தொடர்ச்சியான எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலானது கடந்த மாதம் இஸ்ரேலிய ராக்கெட் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளில் ஒருவரான Fuad Shukr கொல்லப்பட்ட பிறகு உச்ச பதற்ற நிலையை அடைந்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan