IPL-2025 Retention - மும்பை அணியில் அதிகமாக கவனிக்கப்படும் வீரர்கள் யார்?
19 ஆவணி 2024 திங்கள் 14:30 | பார்வைகள் : 993
2025ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக மும்பை அணி தக்க வைக்க அதிக வாய்ப்பு இருக்கும் 4 வீரர்களின் பெயர்கள் விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிக பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி பார்க்கப்படுகின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை மொத்தம் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ளது.
கடந்த ஆண்டு ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கப்பட்டது.
இது அணியின் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அத்துடன் கேப்டன் பதவி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் பறிக்கப்பட்டதால் அவர் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கேப்டன் என்ற முறையில் ஹர்திக் பாண்டியா-வை மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வீரராக தக்க வைக்கலாம்.
இரண்டாவதாக இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரராகவும் உள்ள சூர்யகுமார் யாதவ் இரண்டாவது வீரராக தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மூன்றாவதாக இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராக உள்ள பும்ரா-வை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக அணியில் தக்க வைக்கும்.
நான்காவது வீரராக ரோகித் சர்மாவை மும்பை அணி தக்க வைக்க விரும்பலாம், ஆனால் இதற்கு ரோகித் சர்மா விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.
எனவே நான்காவது வீரராக மும்பை அணியின் இளம் வீரரான இசான் கிஷான் தக்கவைக்கும் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் இளம் வீரர் திலக் வர்மா, ஜெரால்ட் கோயிட்சே, டிம் டேவிட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் திவால்ட் பிரேவிஸ் ஆகியோரில் யாரேனும் தக்க வைக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.