Paristamil Navigation Paristamil advert login

The G.O.A.T படத்தில் தல - தளபதி?

The G.O.A.T படத்தில் தல - தளபதி?

19 ஆவணி 2024 திங்கள் 14:55 | பார்வைகள் : 456


விஜய் நடித்துள்ள “தி கோட்” திரைப்படம், அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டது.

அதில் இடம்பெற்றுள்ள சி.எஸ்.கே. பற்றிய Elements, தல - தளபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  குறிப்பாக, சி.எஸ்.கே.வின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிற டீ-ஷர்ட்டில், Definitely Not என்ற வாசகத்துடன் விஜய் நடந்து வரும் காட்சியை சிலாகித்து எக்ஸ் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, கிரிக்கெட் மைதானத்தில் விஜய் சண்டையிடும் காட்சியும் கோட் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளதால், இயக்குநர் வெங்கட் பிரபு, தனக்கு விருப்பமான கிரிக்கெட் விளையாட்டையும், படத்தில் சேர்த்துள்ளார் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோட் பட ட்ரெய்லரில் இடம்பெற்ற பிரபல பஞ்ச் லைனை, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு அதற்கு தோனியின் படத்தையும் வைத்து புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது சி.எஸ்.கே.

கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெயர் வாங்கித் தந்த சென்னை-28 திரைப்படத்தில், கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் பெட்டிங் விஷயங்களை நகைச்சுவை கலந்து கையாண்டிருப்பார். ஐ.பி.எல். என்ற ஒரு நிகழ்வே அறிமுகம் செய்யப்படாத காலகட்டம் அது…

அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடங்கப்பட்டு சி.எஸ்.கே. அணி அறிமுகமான போது, அதன் ப்ராண்ட் அம்பாசிடர் (Brand ambassador) ஆக இருந்தார் நடிகர் விஜய்…. அப்போது தொடங்கிய தல - தளபதி இடையிலான நட்பு இன்று வரை நீடிக்கிறது. குறிப்பாக பீஸ்ட் படத்தின் சூட்டிங் நடந்த போது மற்றொரு விளம்பர படப்பிடிப்புக்காக சென்ற தோனி, நடிகர் விஜயை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.கே. ஆதரவாளரான இயக்குநர் வெங்கட் பிரபு, கோட் படத்தின் கதையில் சென்னை சேப்பாக்கத்தையும் இணைத்துள்ளதால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சி.எஸ்.கே. ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சேப்பாக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு படம்பிடித்திருந்தால், தோனியும் ஒரு Cameo ரோலில் நடித்திருக்கக் கூடும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்