கீரை தோசை
19 ஆவணி 2024 திங்கள் 15:17 | பார்வைகள் : 882
கீரை தோசை சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், மிகவும் ஆரோக்கியமானது. கீரையில் தயாரிக்கப்படும் இந்த ப்ரோடீன் நிறைந்த தோசையானது காலை அல்லது இரவு உணவில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். சுவையாக இருக்கும் இந்த தோசையானது, உங்கள் உணவில் கீரைகளை சேர்க்க மற்றொரு சிறந்த வழியாகும்.
கீரை தோசைக்கு தேவையான பொருட்கள்:
1/2 கப் - சுத்தமான கீரை
1/2 டீஸ்பூன் - வெந்தயம்
தேவைக்கேற்ப - உப்பு
1/4 கப் - உளுத்தம் பருப்பு
1 கப் - கோதுமை மாவு
4 டீஸ்பூன் - எண்ணெய்
செய்முறை:
இந்த தென்னிந்திய செய்முறையை செய்வதற்கு, உளுந்து மற்றும் வெந்தயத்தை கிண்ணத்தில் போதுமான தண்ணீருடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவி, அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்சியில் தோசைக்கு மாவு அரைப்பது போல அரைத்து வைக்க வேண்டும்.
மிக்சியில் அரைத்த மாவை மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றவும், பிறகு கீரையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதோடு கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை முன்னதாக அரைத்த மாவுடன் சேர்க்கவும். மேலும் அதில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர், நான்-ஸ்டிக் தவாவை சூடாகியதை உறுதிப்படுத்த, அதன் மீது சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
பிறகு நான்-ஸ்டிக் தவா மீது ஒரு கரண்டி அளவு மாவை ஊற்றி, தோசையை போல சுடவும்.
தோசையின் இருபுறமும் லைட் பிரவுன் நிறமாக மாறும் வரை வேக வைக்கவும். மேலும், தோசையை சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
தோசையை ஊற்றிய பிறகு, அதன் மீது நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மிளகுத்தூள் கொண்டு அலங்கரிக்கவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை தயார். இந்த தோசைக்கு சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சேர்த்து காலை அல்லது இரவு டிஃபனாக சாப்பிடலாம்.