சாள்-து-கோல் விமான நிலையத்தில் இரண்டு மில்லியன் யூரோக்கள் பணத்துடன் இருவர் கைது!
.jpg)
19 ஆவணி 2024 திங்கள் 15:47 | பார்வைகள் : 12164
இரண்டு மில்லியன் யூரோக்கள் ரொக்கப்பணத்துடன் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. ஓகஸ்ட் 18, நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் அல்ஜீரியாவில் இருந்து துருக்கி நோக்கி பரிஸ் வழியாக பயணித்துள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் கொண்ட பரிஸ் சுங்கவரித்துறையினர் அவர்கள் இருவரையும் சோதனையிடும் போதே மேற்படி பணம் எடுத்துச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
இதுபோன்ற பெரும் தொகை பணம் அனுமதி இன்றி கொண்டுசெல்வது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். கைது செய்யப்பட்ட இருவர் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.