■ காட்டுத்தீ.. 4,000 ஹெக்டேயர்கள் நாசம்..!

20 ஆவணி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 4802
இதுவரை ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பரவலில் 4,000 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Hérault மாவட்டத்தில் பெரும் காட்டுத் தீ பரவி வரும் நிலையில், அதனைப் பார்வையிட நேற்று ஓகஸ்ட் 19, உள்துறை அமைச்சர் Gérald Darmanin அங்கு பயணித்திருந்தார். தீயணைப்பு படையினரை சந்தித்து உரையாடியிருந்தார். அதன்போது, 'இவ்வருடத்தில் இதுவரை 4,000 ஹெக்டேயர்கள் காடு எரிந்துள்ளன. சென்ற வருடம் 12,000 ஹெக்டேயர்கள் காடு எரிந்திருந்ந்து!' என குறிப்பிட்டார்.
Hérault மாவட்டத்தில் இதுவரை 400 ஹெக்டேயர்கள் காடு தீப்பிடித்து எரிந்துள்ளன. பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் களத்தில் இருக்கின்றனர்.