பிரித்தானியாவில் 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடித் தடங்கள்

20 ஆவணி 2024 செவ்வாய் 05:55 | பார்வைகள் : 4280
பிரித்தானியாவில் 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் காலடித் தடங்களை 10 வயது சிறுமி கண்டுபிடித்துள்ளார்.
பிரித்தானியாவில் வேல்ஸின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு கடற்கரை ஓரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, 10 வயதான டீகன் (Tegan) என்ற சிறுமி, ஒரு மிகப் பாரிய டைனோசர் காலடித் தடங்களை எதிர்பாரா முறையில் கண்டுபிடித்துள்ளார்.
டீகன் தனது தாயார் கிளையர் (Claire) உடன் Penarth கடற்கரை ஓரத்தில் Lavernock Point என்ற இடத்தில் 200 மில்லியன் (20 கோடி) ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தின் டைனோசர் காலடித் தடங்களை கண்டுபிடித்துள்ளார்.
இவை ஐந்து பாரிய காலடித் தடங்கள் சிவப்பு சாம்பல் கல்லில் பதிந்து காணப்பட்டன.
ஒவ்வொரு காலத்தடமும் 75 செ.மீ. வரை இடைவெளியில் வைக்கப்பட்டு இருந்தன.
இவை பாரிய புல்லுண்ணி டைனோசர்களின் கால் தடங்களாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது பல ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாலேசு தேசிய அருங்காட்சியகத்தின் பவளவியல் பராமரிப்பாளர் சிண்டி ஹவெல்ல்ஸ், இந்த காலடித் தடங்கள் உண்மையானவை என்ற முடிவில் உறுதியாக உள்ளார்.
காலடித் தடங்கள் இடைவெளியில் தெளிவான ஒரு தனித்துவமான படி உள்ளது, இதனால் இவை டைனோசர் காலங்களில் தான் உருவாகியிருக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
டீகனின் தாயார் கிளையர், இது மிகப்பாரிய ஆய்வு என்றும், அவர்களின் கடற்கரை பயணம் எதிர்பாராத அதிசயத்தில் முடிந்தது என்றும் கூறினார்.
இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகத்தை பிரமிக்க வைத்துள்ளது. டீகன் மற்றும் அவரது தாயார், இந்த அற்புதமான அனுபவத்தைப் பற்றி பெருமையுடன் உள்ளனர், மேலும் நிபுணர்கள் இந்த தடங்களை மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1