Paristamil Navigation Paristamil advert login

 பிரித்தானியாவின் புதிய ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்  -  ஆய்வு தகவல்

 பிரித்தானியாவின் புதிய ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்  -  ஆய்வு தகவல்

20 ஆவணி 2024 செவ்வாய் 07:22 | பார்வைகள் : 1602


பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களில்  பிரித்தானிய பிரதமரின் செல்வாக்கு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றார் லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர்.

 பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இம்மாதம், அதாவது, ஒகத்து மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை, ஆய்வமைப்பான Ipsos மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துணைப்பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் மற்றும் சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரின் செல்வாக்கு மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் 52 சதவிகிதம் பேர் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

22 சதவிகிதத்தினர் மட்டுமே பிரித்தானியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

19 சதவிகிதத்தினர் நடுநிலையாக பதிலளித்துள்ளார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்