குழந்தையின் வயிற்றில் காணப்பட்ட கட்டி.... மருத்துவர்கள் அதிர்ச்சி
4 புரட்டாசி 2023 திங்கள் 10:08 | பார்வைகள் : 5869
பாகிஸ்தானில் வயிற்றுவலியால் அவதியுற்றுவந்த குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கட்டி ஒன்று இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
அந்த 10 மாதக் குழந்தை, கடும் வயிற்று வலியால் அவதியுற்றுவந்துள்ளாள்.
அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளுக்கு ஸ்கேன் ஒன்று எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
அதன்படி அவளுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கேனில், அவளது வயிற்றில் கட்டி ஒன்று இருப்பது தெரியவந்ததால், குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது என முடிவாகியுள்ளது.
குழந்தையின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்தக் கட்டியை அகற்றியுள்ளார்கள் மருத்துவர்கள்.
அந்தக் கட்டியை ஆராய்ந்தபோதுதான் அந்த அதிரவைக்கும் உண்மை தெரியவந்தது.
அந்த 10 மாதக் குழந்தையின் வயிற்றில் இருந்தது, மருத்துவர்கள் எண்ணியதுபோல, கட்டி அல்ல.
அது, அந்தக் குழந்தையின் சகோதரி அல்லது சகோதரன்.
உண்மையில் அந்தக் குழந்தை இரட்டைக் குழந்தைகளில் ஒருத்தி.
அவளது சகோதரன் அல்லது சகோதரி, தாயின் வயிற்றில் உருவாவதற்கு பதிலாக, அந்த குழந்தையின் வயிற்றுக்குள்ளேயே உருவாகியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த 10 மாதக் குழந்தை உடல் நலம் தேறிவருகிறாள்.
இதற்கிடையில், ஒரு மில்லியனில் ஒரு குழந்தைக்குத்தான் இப்படி நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.