Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி...?

அமெரிக்காவில் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி...?

20 ஆவணி 2024 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 4534


அமெரிக்க அதிபர் தேர்தலில்  தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கிற்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

2இதன்போது  எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல்களை வெகுவாக பாராட்டிய டிரம்ப், நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், எலான் மஸ்க்கிற்கு தனது அரசின் கீழ் அமைச்சர் துறையை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.


எலான் மஸ்குக்கு ஆலோசனைப் பாத்திரத்திற்காக அல்லது அமைச்சரவைப் பணிக்காக தேர்தெடுக்கப்படுவாரா என் கேள்வி எழுப்பியபோது ,

தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என  டிரம்ப் கூறியுள்ளார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்