PSG - எம்பாபே மோதல் தொடர்கிறது..!
20 ஆவணி 2024 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 4320
PSG கழகத்தில் இருந்து விலகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அக்கழகத்துடனான Kylian Mbappé இன் யுத்தம் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் கழகத்திடம் இருந்து €55 மில்லியன் யூரோக்கள் ஊதியம் கிடைக்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. அதனை வழங்கமாட்டோம் என்பது PSG தரப்பு வாதம். அக்கழகத்துடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு Real Madrid அணியில் விளையாடும் எம்பாபே, இறுதியாக 'பிரெஞ்சு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சட்டப்பிரிவில்' (commission juridique de la LFP) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
PSG கழகத்தில் இணைந்து விளையாடும் போது இறுதி மூன்று மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டு தற்போது அக்கழகத்துக்கு இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என 'சட்டபூர்வமான அறிவித்தல்' அனுப்பப்பட்டுள்ளது.