உடல் எடையை குறைக்க வேண்டுமா.?
20 ஆவணி 2024 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 1691
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் அதிக உடல் எடையால் சிரமப்படுகிறார்கள். இவர்களில் வெகுசிலரே தங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிகின்றனர். மற்றவர்கள் எடுத்தாலும் தன்னை தொடர்ச்சியாக செய்வதில்லை. சிலர் எடையை குறைக்க உணவை தவிர்ப்பார்கள் , இன்னும் சிலர் காலை, மாலை என உடலுழைப்பை வெளிப்படுத்துவார்கள் அல்லது ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுவார்கள். ஆனால் என்ன செய்தாலும் கடைசியில் உடல் எடை குறையாது.
உண்மையில் உடல் எடையை குறைக்க ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.அப்போது தான் முடிவு கிடைக்கும், இல்லை என்றால் உடல் எடையை குறைப்பது கடினம் தான். உடல் எடை குறையாமல் போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நாம் சாப்பிட்ட பிறகு பொதுவாக செய்யும் சில தவறுகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா.!! ஆம், நாம் சாப்பிட்ட பிறகு செய்யும் சில தவறுகளால் நம் உடல் எடையை குறையாது, அவை என்னவென்பதை இங்கே பார்க்கலாம்…
சாப்பிட்டுவிட்டு உடனடியாக நேராக படுத்து கொள்ளவது… பெரும்பாலான மக்கள் உணவு சாப்பிட்ட பிறகு குறிப்பாக இரவு உணவிற்கு பிறகு படுக்கைக்கு சென்று நேராக படுத்து கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிச் செய்வதால் நீங்கள் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாது, எனவே அந்த உணவிலில் இருந்து போதுமான சத்துக்கள் கிடைக்காது. எனவே சாப்பிட்ட பிறகு தினமும் குறைந்தது 10-15 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது… பெரும்பாலான மக்கள் சாப்பிட்ட பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. இது ஒரு பெரிய தவறு. சாப்பிட்ட பிறகு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சீராக நடைபெறுவதோடு, ஊட்டச்சத்துக்களை நம் உடல் சரியாக உறிஞ்ச உதவுகிறது. தண்ணீர் குடித்த பிறகு, நீண்ட நேரம் பசி எடுக்காது.
காஃபினுடன் கூடிய ஹெர்பல் டீ… சாப்பிட்டு முடித்த பின் மூலிகை டீ குடித்தால் உண்மையில் அதிக பலன்கள் கிடைக்கும். இதனால் உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவது அதிகரிப்பதோடு, வயிறும் சுத்தமாக இருக்கும். மேலும், இரவில் நல்ல தூக்கம் வரும். ஆனால் பலரும் காஃபினுடன் கூடிய ஹெர்பல் டீ பருகுகிறார்கள், நீங்கள் சாப்பிட்ட பின் குடிக்கும் ஹெர்பல் டீ-யில் எந்த வகையிலும் காஃபின் இருக்கக்கூடாது.
சாப்பிட்ட உடனேயே படுப்பது: நன்கு திருப்தியாக சாப்பிட்ட பிறகு, குறிப்பாக மதிய வேளைகளில் தூக்கம் வருவது இயற்கையானது. ஆனால் சாப்பிட்ட உடனேயே நீங்கள் தூங்க முயற்சித்தால், நீங்கள் சாப்பிட்ட உணவை செயல்படுத்த உங்கள் உடல் தொடர்ந்து கடினமாக உழைக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே இரவு பகல் எதுவாக இருந்தாலும், சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடக்க வேண்டும். குறிப்பாக இரவில் சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்களுக்கு படுக்கைக்கு சென்று படுக்க வேண்டாம்.
இரவு ஹெவியான உணவு… இரவு நேரங்களில் உங்கள் தூக்கம் அல்லது செரிமானத்தை தொந்தரவு செய்யும் ஹெவியான உணவுகளை சாப்பிட வேண்டாம். இவை கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும், இதனால் எடை குறையாது. இரவில் முடிந்தவரை மைல்ட்டான உணவை எடுத்து கொள்ளுங்கள் பச்சைக் காய்கறிகள், வேக வைத்த முழு தானியங்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இரவில் மது, சிகரெட் போன்றவற்றையும், அல்ட்ரா ப்ராசஸ்ட் உணவுகளையும் தவிர்க்கவும். அதே போல பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் பருமனை அதிகரிக்கும்.
அதிகமாக ஸ்ட்ரச் செய்ய கூடாது: சாப்பிட்ட பிறகு சிறிது லேசாக ஸ்ட்ரெச்சில் ஈடுபாடுவது நன்மை பயக்கும். ஆனால் இதை அதிகமாக செய்ய கூடாது. லேசாக ஸ்ட்ரச்சில் ஈடுபடுவது செரிமான உறுப்பை தளர்த்தி, செரிமானத்தை மேம்படுத்தும். எனவே உடலை வருத்தி கொள்ளாமல் மிக மெதுவாக ஸ்ட்ரச் செய்யுங்கள்.
மோர் அல்லது தயிரை தவிர்ப்பது: இரவு உணவிற்குப் பிறகு, நிச்சயமாக சில ப்ரோபயாடிக் உணவுகளை சாப்பிடுங்கள். இது உங்கள் செரிமானத்தை சரியாக வைத்திருக்கும். செரிமானம் சரியாக இருந்தால், உங்களின் உடல் எடை கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும்.