பார்தெல்லா - மரீன் லு பென்னைச் சந்திக்கும் ஜனாதிபதி மக்ரோன்!
.jpg)
20 ஆவணி 2024 செவ்வாய் 13:39 | பார்வைகள் : 9094
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Rassemblement national கட்சித்தலைவரான பார்தெல்லா மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரையும் சந்திக்க உள்ளார்.
எலிசே மாளிகையில் வைத்து இச்சந்திப்பு வரும் ஓகஸ்ட் 26 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற உள்ளது. புதிய பிரதமரை தேர்தெடுப்பது தொடர்பில் பெரும் குழப்பங்கள் நிலவும் நிலையில், இந்த சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாக உள்ளதாக அறிய முடிகிறது.
அதற்கு முன்னதாக வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை Nouveau Front populaire கூட்டணிக்கட்சிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.