ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்
4 புரட்டாசி 2023 திங்கள் 10:19 | பார்வைகள் : 6626
ஆப்கானிஸ்தானில் 04-09-2023 இல் அதிகாலை ரிக்டர் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 7.08 மணி அளவில் மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கே தென்கிழக்கில் 196 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் 4.4 ஆக பதிவாகியுள்ளது என ஆப்கானிஸ்தான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டு இருப்பதால் பொருளிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு விவரமும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா மற்றும் யாரேனும் காயமடைந்து உள்ளனரா என்று இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.