Paristamil Navigation Paristamil advert login

ஆபிரிக்க நாடுகளுக்கு 100,000 குரங்கு அம்மை தடுப்பூசிகள் அனுப்பும் பிரான்ஸ்..!

ஆபிரிக்க நாடுகளுக்கு 100,000 குரங்கு அம்மை தடுப்பூசிகள் அனுப்பும் பிரான்ஸ்..!

21 ஆவணி 2024 புதன் 06:15 | பார்வைகள் : 5330


குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு 100,000 வரையான தடுப்பூசிகளை பிரான்ஸ் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கென்யா, ருவாண்டா, உகாண்டா போன்ற மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பாவுக்குள்ளும், ஆசியாவுக்குள்ளும் இந்த தொற்று பரவியுள்ளது. அதை அடுத்தே இந்த நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக தடுப்பூசிகளை பிரான்ஸ் அனுப்பி வைக்க உள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் Gabriel Attal தெரிவித்தார். 

அதேவேளை, குரங்கு அம்மையை எதிர்கொள்ளவும், பரவலைத் தடுக்கவும் பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்