கொட்டுக்காளி திரைப்படம் பல விருதுகளை வென்ற ரகசியம் என்ன?
21 ஆவணி 2024 புதன் 07:03 | பார்வைகள் : 1818
சிவகார்த்திகேயன் எஸ்.கே நிறுவனத்தின் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. சிறந்த படத்திற்கான ‘GOLDEN LYNX’ விருதையும்,53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் அவர்களே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
மேலும் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.டிரைலர் வித்தியாசமாக இருப்பதால் படத்திற்கு வெயிட்டிங் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்
மேலும் டிரைலர் வெளியீட்டு விழாவில் விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என சூரி கூறியுள்ளார்.
குறிப்பாக இந்த திரைபடத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது என்றும் , மியூசிக் எதுவும் இல்லாமல் லைவ் டப்பிங் செய்து படம் உருவாகியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதனால் சினிமா ரசிகர்களுக்கு இடையே கொட்டுக்காளி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.