காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 12 பேர் பலி
21 ஆவணி 2024 புதன் 07:28 | பார்வைகள் : 1614
காசா நகரில் உள்ள முஸ்தபா ஹபீஸ் பாடசாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் எகிப்துக்கு தமது பயணத்தைத் தொடரும் நிலையில், தற்போது இடம்பெறும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் விதிமுறைகளை அமெரிக்கா மாற்றி, இஸ்ரேலுக்குச் சார்பாக செயற்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட ஆறு பேரின் உடல்களை கான் யூனிஸிலிருந்து இருந்து மீட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
இந்தநிலையில் எஞ்சிய கைதிகளின் குடும்பத்தினர், அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என கோருகின்றனர்.