ஈரானின் கோர விபத்து 28 யாத்திரீகர்கள் பலி

21 ஆவணி 2024 புதன் 07:30 | பார்வைகள் : 4152
ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாக்கிஸ்தானை சேர்ந்த 28 யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் யாஸ்த் மாநிலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 14 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி 7ம் நூற்றாண்டில் மரணித்த ஷியா துறவியை வழிபடுவதற்காக சென்றுகொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது