Paristamil Navigation Paristamil advert login

காங்கேசன்துறையை வந்தடைந்த பயணிகள் கப்பல்

காங்கேசன்துறையை வந்தடைந்த பயணிகள் கப்பல்

21 ஆவணி 2024 புதன் 10:05 | பார்வைகள் : 4077


இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் நேற்று (20​) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்நிலையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்